search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் எதிர்ப்பு"

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை சந்தித்ததற்கு கரூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #thirunavukkarasar

    கரூர்:

    தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கரூரில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் தாந் தோன்றி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளியணை பகு தியில் நடந்தது. கூட்டத்திற்கு தாந்தோன்றி வட்டார தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன், பட்டதாரிகள் அணி மாநில துணை தலைவர் லூர்துசாவியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கரூர் நகர தலைவர் ஆர்.ஸ்டீபன் பாபு, வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம நாதன், மாவட்ட செயலாளர் சுரேகா பாலசந்தர், துணை தலைவர் சின்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராணுவ விமானத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த பயன்பாட்டுக்காக, மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்தது கண்டனத்துக்குரியது. எனவே அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும்.

    கரூர் அருகே ஜேடர் பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன் மூலமாக பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம், வெள்ளியணை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை சந்தித்தது காங்கிரஸ் தொண்டர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாய்விமல் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thirunavukkarasar

    ×